குடும்ப தகராறில் அண்ணியை அரிவாளால் வெட்டி கொன்ற கொழுந்தன் கைது

குடும்ப தகராறில் அண்ணியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கொழுந்தனை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-06-30 23:42 GMT
மும்பை,

மும்பை கார், பஜார் கல்லி பகுதியை சேர்ந்தவர் நிலேஷ் (வயது45). இவரது மனைவி நமிதா (40). இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளான். இவர்களுடன் நிலேசின் தாய், தம்பி யோகேஷ் (38) ஆகியோரும் வசித்து வந்தனர்.

இதில் கொழுந்தன் யோகேசுக்கும், நமிதாவுக்கும் சிறு, சிறு பிரச்சினைகளுக்கு கூட அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் நமிதா தண்ணீர் பிடிக்க சென்ற போது பக்கத்து வீட்டில் நின்று அதிக நேரம் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நமிதா, யோகேஷ் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கடும் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து நமிதாவை வெட்டினார். இதில் படுகாயமடைந்த நமிதா ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு நமிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து யோகேசை கைது செய்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்