திருப்பூரில் கத்தியால் குத்தி பெண் படுகொலை கள்ளக்காதல் விவகாரமா? போலீசார் விசாரணை
திருப்பூரில் கத்தியால் குத்தி பெண் படுகொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பர்வீன்பானு(வயது 30). இவருடைய கணவர் இப்ராஹிம். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
பர்வீன்பானு தனது கணவரை பிரிந்து திருப்பூர் பெரியகடை வீதியில் ஒரு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். மேலும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் அவர் வேலை செய்து வந்தார். குழந்தைகள் பர்வீன்பானுவின் தாயுடன் மேட்டுப்பாளையத்தில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல வேலைக்கு சென்ற பர்வீன்பானு இரவு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். பின்னர் நேற்று காலையில் பர்வீன்பானுவின் வீட்டில் இருந்து மர்ம ஆசாமி ஒருவர் திடீரென வெளியே ஓடியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அங்கு பர்வீன்பானு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது பர்வீன்பானு தலை, மார்பு, வயிறு, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
வீட்டில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அக்கம் பக்கத்தினரிடம் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் மோப்ப நாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், தனியாக இருந்த பர்வீன்பானுவின் வீட்டிற்கு வந்த மர்மஆசாமி, அவருடன் தகராறில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அந்த தகராறில், ஆத்திரம் அடைந்த அந்த ஆசாமி கத்தியால் பர்வீன்பானுவை சரமாரியாக குத்திக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கலாம் என்பதும் தெரிய வந்தது.
பர்வீன்பானுவின் வீட்டிற்கு ஒரு மர்ம ஆசாமி அடிக்கடி வந்து செல்வதும், தப்பி ஓடியவர் ஒருவேளை அந்த நபராக இருக்கலாம் என்றும் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த மர்ம ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் வைத்து, கள்ளக்காதல் விவகாரத்தில் பர்வீன்பானு கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.