நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் கூறினார்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில், நுண்ணீர் பாசன திட்டம் நடப்பு நிதியாண்டில் வேளாண்மை துறை மூலம் 1,500 எக்டருக்கு ரூ.6 கோடியே 49 லட்சத்து 78 ஆயிரம்் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கரும்பு பயிருக்கு சிறு-குறு விவசாயிகளுக்கு ரூ.97,134 மற்றும் இதர விவசாயிகளுக்கு ரூ.75,452-ம் வழங்கப்படுகிறது. மேலும், தென்னை பயிருக்கு சிறு-குறு விவசாயிகளுக்கு ரூ.27,770 மற்றும் இதர விவசாயிகளுக்கு ரூ.21,572-ம் மானியம் வழங்கப்படுகிறது. மழைத்தூவான் அமைக்க சிறு-குறு விவசாயிகளுக்கு ரூ.36176 மற்றும் இதர விவசாயிகளுக்கு ரூ.28,101-ம் மானியம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கலாம்
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை, அடங்கல், கணிணி சிட்டா, நில வரை படம், சிறு-குறு விவசாயிகளாக இருப்பின் வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் செய்து இத்திட்டத்தில் பயன்பெற தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மைத் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.