கரூர் அரசு மருத்துவக்கல்லூரியை விரைவில் முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
ஆகஸ்டு மாதம் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க இருப்பதையொட்டி, கரூர் அரசு மருத்துவக்கல்லூரியை விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்,
மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து கரூர் அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. கரூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க, கரூர் காந்திகிராமம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.269 கோடியே 59 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
2019-20-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆகஸ்டு மாதத்தில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்க வகுப்பறை கட்டிட பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் இருக்கின்றன. எனினும் மற்ற கட்டிடங்களின் பூச்சு வேலைகள் உள்ளிட்டவற்றை முடித்து முழு கட்டிட பணியும் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட கட்டுமானப்பணிகளை நேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு, மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுமான பணிகள் எந்த நிலையில் இருக்கின்றன? முதலாம் ஆண்டு மாணவர்கள் படிப்பதற்கான வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகம், நூலக கட்டிடங்கள் தயார் நிலையில் இருக்கிறதா? என்பன உள்ளிட்டவற்றை அமைச்சர் கேட்டறிந்து மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி பணிகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறுகையில்,
கரூர் மாவட்ட மக்களுக்கு கிடைக்கப்பெற்ற தமிழக அரசின் திட்டங்களுள் மிக முக்கியமான திட்டமும், மருத்துவக்கல்லூரி திட்டம் ஒன்றாகும். கரூரில் 850 படுக்கைகள் கொண்ட 150 மாணவ, மாணவிகள் பயிலக்கூடிய மருத்துவக்கல்லூரி கட்டுவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி பணிகள் தொடங்கப்பட்டு விரைந்து நடைபெற்று வருகிறது. ரூ.75 கோடியே 79 லட்சம் மதிப்பில் 3.20 லட்சம் சதுரஅடி பரப்பில் வகுப்பறைக் கட்டிடங்களும், ரூ.122 கோடியே 79 லட்சம் மதிப்பில் 5.58 லட்சம் சதுரஅடி பரப்பில் மருத்துவமனைக்கட்டடங்களும், ரூ.71 கோடி மதிப்பில் 2.99 லட்சம் சதுரஅடி பரப்பில் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகளும் என ரூ.269 கோடியே 59 லட்சம் மதிப்பில் 11.78 லட்சம் சதுரஅடி பரப்பில் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.
இந்த மருத்துவக்கல்லூரி நகரின் மையப்பகுதியான காந்திகிராமத்தில் 17.45 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான அனைத்து பணிகளும் முடிவுற்றதால் மத்திய அரசின் இந்திய மருத்துவ கழகம் அனுமதி வழங்ப்பட்டுள்ளது. முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்டு மாதம் தொடங்கும். எனவே விரைவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் இந்த மருத்துவக்கல்லூரியை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவார். இந்த ஆண்டு முதல் மருத்துவ மனையும், கல்லூரியும் இயங்க உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்ட பின்பு கரூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி கரூரைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
ஆய்வின்போது, அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலா, வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, மருத்துவ கட்டிடங்கள் உதவி செயற்பொறியாளர்கள் தவமணி, சிவக்குமார், மகாவிஷ்ணு, வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.திருவிகா, கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.