பூதப்பாண்டி அருகே பட்டப்பகலில் துணிகரம் பாத்திரக்கடையில் ரூ.43 ஆயிரம் திருட்டு

பூதப்பாண்டி அருகே பட்டப்பகலில் பாத்திரக்கடையில் ரூ.43 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-06-30 22:15 GMT
பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே திட்டுவிளை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பீர்முகமது. இவர், திட்டுவிளை சந்திப்பில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். மதியம் 12 மணிக்கு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடைக்கு வந்து பாத்திரம் கேட்டார்.

உடனே, பாத்திரம் எடுப்பதற்காக பீர்முகமது கடையின் உள்பகுதிக்கு சென்றார். பின்னர் அவர், திரும்ப வந்து பார்த்த போது, அந்த நபரை காணவில்லை.

ரூ.43 ஆயிரம் திருட்டு

மேலும், மேஜையில் வைத்திருந்த ரூ.43 ஆயிரம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்கு வந்த மர்ம நபர், பீர்முகமது பாத்திரம் எடுக்க சென்ற போது பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து பீர்முகமது பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் பாத்திரக்கடையில் மர்ம நபர் ரூ.43 ஆயிரத்தை திருடிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்