மனித உரிமையை பாதுகாக்கும் பொறுப்பு வக்கீல்களுக்கு உண்டு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேச்சு
மனித உரிமையை பாதுகாக்கும் பொறுப்பு வக்கீல்களுக்கு உண்டு என்று ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கோபால்கவுடா பேசினார்.
திருச்சி,
திருச்சி வக்கீல்கள் சங்கத்தின் 129-ம் ஆண்டு விழா எல்.கே.எஸ்.மகாலில் நடந்தது. திருச்சி வக்கீல்கள் சங்க தலைவர் ரமேஷ் நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. குமார் முன்னிலை வகித்தார். மூத்த வக்கீல்கள் முத்துகிருஷ்ணன், மார்ட்டின், சிவசங்கர் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கோபால் கவுடா கலந்து கொண்டு பேசியதாவது:-
மனித உரிமையை பாதுகாக்க...
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப நீதித்துறையும், நீதிமன்றங்களும் செயல்பட வேண்டும். நாட்டில் ஏராளமான வழக்குகள் குவிந்து கிடப்பதற்கு காரணம். நீதிமன்றங்களில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதே. உச்சநீதிமன்றம் மனித உரிமையை பாதுகாக்கும் வகையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பல தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது.
உலக நாடுகள் பலவற்றுக்கும் இந்த தீர்ப்புகள் முன்னுதாரணமாக அமைந்துள்ளன. வக்கீல்கள் தங்களை தேடி வரும் கட்சிக்காரர்களுக்கு நீதியை நிலை நாட்டி தர வேண்டும். மனித உரிமையை பாதுகாக்கும் பொறுப்பு வக்கீல்களுக்கு உண்டு. நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்பின் மூலம் சமூக மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போது தான் சாமானியர்களுக்கும் நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சங்க துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். வக்கீல்களுக்கு இடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் செயலாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.