மும்பையில் கடந்த 26-ந் தேதி ரெயில் விபத்துகளில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத அதிசயம்
மும்பையில் தினசரி ரெயில் விபத்துகளில் சிக்கி 8 பேர் பலியாகி வரும் நிலையில், கடந்த 26-ந் தேதி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத அதிசயம் நடந்து உள்ளது.
மும்பை,
எனவே இதனை தடுக்க மத்திய, மேற்கு ரெயில்வே பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றது. குறிப்பாக பொது மக்கள் தண்டவாளங்களை கடந்து செல்வதை தடுக்க பெரும்பாலான இடங்களில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.
மத்திய ரெயில்வே 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்டவாள தடுப்பு சுவரில் இருந்த உடைப்புகளை சரி செய்து உள்ளது. 13 கி.மீ. தூரத்துக்கு தடுப்பு சுவர் கட்டி உள்ளது. மேலும் கடந்த 1½ ஆண்டில் 41 நடைமேம்பாலங்களை கட்டி உள்ளது. இதுதவிர பயணிகள் வசதிக்காக ரெயில்நிலையங்களில் 49 நகரும் படிக்கட்டுகள், 22 லிப்டுகள் வைக்கப்பட்டன.
இதேபோல மேற்கு ரெயில்வேயும் 52 இடங்களில் தடுப்பு சுவர்களில் இருந்த இடைவெளிகளை அடைத்தது. 9 கி.மீ. தூரத்துக்கு தடுப்பு சுவர் கட்டியது. இதையும் மீறி தண்டவாளத்தை கடந்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்பலனாக மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை மும்பையில் 1,104 பேர் ரெயில் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். அதாவது சராசரியாக தினமும் 7 பேர் ரெயில் விபத்தில் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரெயில் விபத்தில் சிக்கி 1,207 பேர் உயிரிழந்து இருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி ஒருவர் கூட பலியாகாத அதிசயம் நிகழ்ந்து உள்ளது. தினமும் சுமார் 8 பேர் விபத்தில் சிக்கி பலியாகி வந்த நிலையில் 26-ந் தேதி ஒருவர் கூட பலியாகாதது ரெயில்வேயின் சாதனையாக கருதப்படுகிறது.
ரெயில்வே எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார். எனினும் அன்று ரெயில் விபத்துகளில் சிக்கி 11 பேர் காயமடைந்து இருந்தனர்.
இந்தநிலையில் அடுத்த நாளான நேற்று முன்தினம் மட்டும் மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர். இதில் கல்யாண் மற்றும் பாந்திராவில் தலா 2 பேரும், வசாய், அந்தேரி, வடலா, டோம்பிவிலி, குர்லா ஆகிய இடங்களில் தலா ஒருவரும் ரெயில் விபத்துகளில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் மின்சார ரெயில் போக்குவரத்து மக்களின் உயிர் நாடியாக உள்ளது. தினமும் சுமார் 80 லட்சம் பேர் மின்சார ரெயில்களில் பயணம் செய்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி 2 ஆயிரத்து 981 பேர் பலியானார்கள். அந்த ஆண்டு சராசரியாக தினமும் 8 பேர் மும்பையில் ரெயில் விபத்துகளில் உயிரிழந்து உள்ளனர்.