தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பதுக்கிய குடோனுக்கு சீல் வைப்பு 4 டன் பொருட்கள் பறிமுதல்
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தமிழகத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று தீவிர சோதனை நடத்தப்பட்டு வந்தது. நேற்று மாநகராட்சி ஆணையாளர் வி.பி.ஜெயசீலன் உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலர் வினோத்ராஜா மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் ராஜசேகர், ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், சுகாதார ஆய்வாளர் கண்ணன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கிழக்கு மண்டல பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அவர்கள் பெரியகடை தெரு பகுதியில் ஆய்வு செய்தபோது, அங்கு உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் அங்கு இருந்த 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.
இதைத்தொடர்ந்து தெப்பக்குளம் தெருவில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் இருந்த ஒரு குடோனில் ஆய்வு செய்தபோது, அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சுமார் 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன. உடனடியாக அதிகாரிகள் மாநகர நல அலுவலர் வினோத்ராஜா, கிழக்கு மண்டல உதவி ஆணையர் பிரின்ஸ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். அங்கு இருந்த 4 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தார்கள். பின்னர் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து குடோன் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தொகையை செலுத்த தவறினாலோ, உரிய விளக்கம் அளிக்க தவறினாலோ கோர்ட்டு மூலம் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.