குளித்தலை நகராட்சியில் புதிய கட்டிடங்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்
குளித்தலை நகராட்சியில் பல்வேறு புதிய கட்டிடங்களை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
குளித்தலை,
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில், தேவதானம், ராஜேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட வாளாந்தூர் ஆகிய இடங்களில் தலா ரூ. 15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடங்கள், கே.பேட்டை ஊராட்சிக்குட்பட்ட வீரவள்ளியில் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம், ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பொய்யாமணி ஊராட்சி மன்ற கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.
மரக்கன்றுகள் நட்டார்
இதில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து அய்யர்மலையில் உள்ள குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் ரூ.3 கோடியே 6 ஆயிரம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணிகளையும், அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் விழா நடைபெற்ற அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.இதில் முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர் விஜயவிநாயகம், அரசு கலைக்கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி மற்றும் அரசு அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.