மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கும்மிடிப்பூண்டி தாலுகாவை சேர்ந்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது.
கும்மிடிப்பூண்டி,
நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், சாமிநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு, நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர் டில்லிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு வரவேற்றார். முடிவில் கிராம நிர்வாக அதிகாரி ஜோதி பிரகாசம் நன்றி கூறினார்.
கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார், பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்டங்களை விளக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் அத்துறைகள் தொடர்புடைய திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் போன்றவைகளையும் துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கி கூறினர்.
இதில் 840 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்து 96 ஆயிரத்து 583 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில் நடத்தப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் மழை நீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு கோலப்போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.