நெல்லை அருகே, 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

நெல்லை அருகே 2 வீடுகளில் நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-06-26 23:00 GMT
நெல்லை, 

நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி காட்டாம்புலி பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 55) விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலையில் வயலுக்கு சென்று விட்டு இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோசப் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதேபோல் சீவலப்பேரி அருகே உள்ள பாலாமடை பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் (63). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு, கதவின் மேல் பகுதியில் சாவியை வைத்து விட்டு வயலுக்கு சென்று விட்டார். இரவில் வந்து பார்த்த போது வீடு திறக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 கிராம் தங்க நகை, ரூ.38 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்