திண்டிவனம் அருகே, உடல் கருகிய நிலையில் பச்சிளம் குழந்தை பிணம் - போலீஸ் விசாரணை

திண்டிவனம் அருகே உடல் கருகிய நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-06-24 22:30 GMT
பிரம்மதேசம், 

திண்டிவனம் அருகே குருவம்மாபேட்டை ஏரிக்கரையில் நேற்று காலை பிறந்து சிலமணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தது. இதைபார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி பிரம்மதேசம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜி தலைமையிலான போலீசார் ஏரிக்கரைக்கு வந்து பச்சிளம் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, பிரசவத்தின்போது இறந்ததால் பச்சிளம் குழந்தை உடல் தீவைத்து எரிக்கப்பட்டதா? அல்லது கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொலை செய்து யாரும் தீ வைத்து எரித்துச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்