பிவண்டியில் காவலாளியை கல்லால் அடித்து கொன்ற போதை ஆசாமி கைது மது குடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம்
மது குடிக்க பணம் தர மறுத்த காவலாளியை கல்லால் அடித்து கொலை செய்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
தானே,
மது குடிக்க பணம் தர மறுத்த காவலாளியை கல்லால் அடித்து கொலை செய்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
பிணமாக மீட்பு
தானே மாவட்டம் பிவண்டி தாலோந்தே பகுதியை சேர்ந்தவர் பலிராம். இவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று காலை இவர் வேலைக்கு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. இந்தநிலையில் அம்பாடி பகுதியில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் காவலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தானே போலீசார் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அனில் வாகே (36) என்பவர் தான் காவலாளியை கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
பணத்துக்காக கொலை
விசாரணையில் கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன.
அனில் வாகே சம்பவத்தன்று குடிபோதையில் அம்பாடி பகுதியில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு மதுகுடிக்க மேலும் பணம் தேவைப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர், அந்த வழியாக வந்த பலிராமிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். பலிராம் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அனில் வாகே அவரை கல்லால் அடித்து கொலை செய்து உள்ளார். பின்னர் அவர் வைத்திருந்த ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போனை திருடிவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.