உடுமலை, மடத்துக்குளம் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் சீராக வழங்க ஏற்பாடு; அதிகாரிகள் குழு ஆய்வு
உடுமலை, மடத்துக்குளம் ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகத்தை சீராக வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் குழுவினர் சுழற்சி முறையில் தினசரி ஆய்வு செய்து வருகின்றனர்.
உடுமலை,
பருவமழை பொய்த்ததால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர். கே.எஸ்.பழனிசாமி உத்தரவின் பேரில் உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சி பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகம் சீராக உள்ளதை உறுதி செய்வதற்கு அதிகாரிகள் கொண்ட ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. உதவி இயக்குனர் நிலையில் உள்ள அலுவலர்கள் மேற்பார்வையில் உதவி செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தகுழுவினர், சீரான குடிநீர் வினியோகம் செய்வதை காலை 6 மணிமுதல் சுழற்சி முறையில் ஆய்வு மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர். பொது குடிநீர் குழாய்களில் தண்ணீர் கசிவு, சிறு பழுதுகள் ஏற்பட்டால் ஊராட்சி செயலாளர்கள் மூலம் உடனுக்குடன் சரி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு உட்பட்ட கடத்தூர், சோழமாதேவி, ஜோத்தம்பட்டி, வேடபட்டி, மெட்ராத்தி, காரத்தொழுவு, மைவாடி, தாந்தோணி, துங்காவி, கொழுமம், பாப்பான்குளம் ஆகிய அனைத்து ஊராட்சிகளிலும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சீரான குடிநீர் வினியோகம் மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த திடீர் ஆய்வில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி ஆகியோர் மடத்துக்குளம் அருகே உள்ள கொழுமம், பாப்பான்குளம், மைவாடி போன்ற ஊராட்சியில் உள்ள குடிநீர் பாதுகாக்கப்படும் கிணறுகள், குடிநீர் மேல்நிலை தொட்டியில் உள்ள குடிநீர் ஆகியவற்றின் தரத்தை திடீரென ஆய்வுமேற்கொண்டனர். இதில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் சுகாதாரம் எவ்வாறு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது போன்ற பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இதேபோல் மடத்துக்குளம் அருகே உள்ள கடத்தூர், சோழாமாதேவி, ஜோத்தம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படுகிறதா? வினியோகம் செய்யப்படும் குடிநீர் தரமாகவும், சுகாதாரமாகவும் உள்ளனவா? என்பன போன்ற திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளால் பொதுமக்களுக்கு மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில், ஜோத்தம்பட்டி பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மடத்துக்குளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், சதீஸ் குமார் மற்றும் ஊராட்சி செயலாளர் முகமது இசாக் ஆகியோர் கலந்து கொண்டனர்.