வடக்கன்குளம் அருகே கணினி ஆசிரியர் தேர்வு எழுத வந்தவர்கள் முற்றுகை போராட்டம்

வடக்கன்குளம் அருகே கணினி ஆசிரியர் தேர்வு எழுத வந்தவர்கள் திடீரென்றுமுற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால்பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-23 21:45 GMT
வடக்கன்குளம், 

வடக்கன்குளம் அருகே கணினி ஆசிரியர் தேர்வு எழுத வந்தவர்கள் திடீரென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால்பரபரப்பு ஏற்பட்டது.

கணினி ஆசிரியர் தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கணினி ஆசிரியருக்கான தேர்வு ஆன்லைன் மூலம் நேற்று நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. வடக்கன்குளம் அருகே பழவூரை அடுத்துள்ள லெவிஞ்சிபுரத்தில் உள்ளஒருகல்லூரி தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதற்காக 300-க்கும் மேற்பட்டவர்கள் காலை 8 மணிக்கே வரத்தொடங்கினர்.

8.30 மணிக்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, ேதர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இறுதியில் 34 பேருக்கு கல்லூரியில் போதிய கம்ப்யூட்டர் மற்றும் தேர்வுக்குரிய மென்பொருள் வசதியில்லாததால், தேர்வர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.

முற்றுகை போராட்டம்

தேர்வு நேரம் தொடங்கிய பின்னரும் தேர்வு எழுதவந்தவர்கள்தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாததால் அவர்கள் திடீரென்றுமுற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்தியவர்களுடன் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தங்கமாரி மற்றும் பழவூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களையும் ேதர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

அதனை தொடர்ந்து மதியம் 34 பேரும் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிப்பதாக உறுதியளித்தனர். அதன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் மதியம் 34 பேரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்