பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாட்டுங்கா - முல்லுண்டு
மத்திய ரெயில்வே வழித்தடமான மாட்டுங்கா - முல்லுண்டு இடையே விரைவு வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 9.53 மணி முதல் பிற்பகல் 2.42 மணி வரை விரைவு ரெயில்கள் அனைத்தும் மாட்டுங்கா - முல்லுண்டு இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.
அப்போது விரைவு ரெயில்கள், அனைத்து ரெயில்நிலையங்களிலும் நின்று செல்லும். பராமரிப்பு பணி காரணமாக அனைத்து விரைவு ரெயில்களும் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படும்.
ரெயில்சேவை ரத்து
துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. - சுன்னாப்பட்டி, பாந்திரா இடையே காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 11.34 மணி முதல் மாலை 4.23 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கும், காலை 9.53 மணி முதல் பிற்பகல் 2.44 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில்கள் இயக்கப்படாது. எனினும் இந்த நேரத்தில் குர்லா - பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
இதேபோல காலை 9.56 மணி முதல் மாலை 4.16 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாந்திரா, அந்தேரி, கோரேகாவுக்கும், காலை 10.45 மணி முதல் மாலை 4.58 மணி வரை கோரேகாவ், அந்தேரி, பாந்திராவில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில்கள் இயக்கப்படாது.
மேற்கு ரெயில்வேயில்..
மேற்கு ரெயில்வேயில் இன்று காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.35 மணி வரை போரிவிலி - கோரேகாவ் இடையே விரைவு வழித்தடத்தின் இருமார்க்க பாதையிலும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் விரைவு ரெயில்கள் அனைத்தும் போரிவிலி - கோரேகாவ் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.
இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.