புதிதாக 1,000 பஸ்கள் வாங்க திட்டம் பெஸ்ட் பொது மேலாளர் தகவல்
புதிதாக 1,000 பஸ்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெஸ்ட் பொது மேலாளர் கூறினார்.;
மும்பை,
புதிதாக 1,000 பஸ்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெஸ்ட் பொது மேலாளர் கூறினார்.
பெஸ்ட் நடவடிக்கை
மும்பையில் பெஸ்ட் நிர்வாகம் நகர பஸ்களை இயக்கி வருகிறது. நஷ்டத்தில் இயங்கும் பெஸ்ட் நிர்வாகத்தை லாபத்தில் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க குறைந்தப்பட்ச பஸ் கட்டணத்தை ரூ.5 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 450 மினி, ஏசி மற்றும் பேட்டரி பஸ்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் பஸ்கள்
இந்தநிலையில் மேலும் ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட உள்ளதாக பெஸ்ட் பொது மேலாளர் சுரேந்திரகுமார் பட்கே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் ‘‘ஏற்கனவே 450 புதிய பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். இந்தநிலையில் புதிதாக மேலும் ஆயிரம் பஸ்கள் வாங்குவதற்கான பணிகளை 10 நாட்களில் தொடங்க உள்ளோம்’’ என்றார்.