சிவகாசி பகுதியில் நகை பறிப்பு வழக்கில் 3 பேர் கைது; 42 பவுன் மீட்பு
சிவகாசி பகுதியில் நகை பறிப்பு வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான திருத்தங்கல், மாரனேரி பகுதியில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றது.
இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசில் 2 வழக்கும், சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், மாரனேரி போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது இருசக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் சம்பவம் நடந்த பகுதிகளை கடந்து செல்வது தெரியவந்தது. வாகனத்தின் எண்களை கொண்டு யார்அவர்கள்? என விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சிவகாசி கிழக்கு போலீசார் நேற்று முன்தினம் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்களது ெபயர் ஜான்கென்னடி (வயது30), சிவக்குமார் (29) என்பதும், இவர்கள் தான் சிவகாசி பகுதியில் தொடர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர்களிடம் இருந்து நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்திருந்த வெங்கடேஷ்கண்ணன்(33) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 42 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.