நிரந்தர திட்டங்களை விரைவுபடுத்துவதோடு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முன்னுரிமை அளிக்க வேண்டும்; மாணிக்கம்தாகூர் எம்.பி. கோரிக்கை
விருதுநகர் தொகுதியில் நிரந்தர திட்டங்களை விரைவுபடுத்துவதோடு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.;
விருதுநகர்,
மாணிக்கம்தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சி பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீருக்கான நிலத்தடி நீர் ஆதாரம் வறண்டுவிட்ட நிலையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 30 சதவீதம் குடிநீரே கிடைத்து வரும் நிலையில், நகர் பகுதியில் 12 தினங்கள் முதல் 15 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் பல பகுதிகளில் பல்வேறு காரணங்களால் குடிநீரே கிடைக்காத நிலையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து குழுக்கள் இல்லாத நிலையில் பஞ்சாயத்து செயலர்கள் கிராமங்களில் குடிநீர் வினியோகத்தை முறையாக கண்காணிக்காததால் கிராமமக்கள் குடிநீர் கிடைக்காத நிலையில் விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர்.கிராமங்களில் நீர் ஆதார வறட்சி, குழாய் உடைப்பு, மின்மோட்டார் பழுது போன்ற காரணங்களால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்படும் நிலையில் இதற்கு தீர்வு காண நிதிபற்றாக்குறையே காரணமாக கூறப்படுகிறது.
கிராமப்புறங்களில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள் முறையாக மராமத்து செய்யப்படாத நிலை, ஆக்கிரமிப்புகளால் மழை பெய்தாலும் கூட நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. விருதுநகருக்கான குடிநீர் ஆதாரமான ஆனைக்குட்டம் அணையில் ஷட்டர்கள் வழியாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இருக்கன்குடி அணையில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் அணை வறண்ட நிலையில் உள்ளது. வரத்துக்கால்வாய், பாசன கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மொத்தத்தில் நீர் நிலைகள் வறண்டுவிட்டதால் நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. கோடைக்கால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்த போதிலும் மாவட்ட நிர்வாகம் கோடைக்கால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
எனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் தொகுதியில் உள்ள நகர், கிராமப்புறங்களிலும் குடிநீர் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து மக்களுக்கு குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் கிடைக்காத இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். குடிநீர் ஆதாரங்களை பெருக்க வேண்டியதற்கான நிரந்தர திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் குடிநீர் தொடர்பாக பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு தாமதம் இல்லாமல் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.