கல்வித்துறை அதிகாரி வீட்டில் நகை- பணம் திருடிய வாலிபர் கைது
கல்வித்துறை அதிகாரி வீட்டில் கதவை உடைத்து நகை -பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்,
அரியாங்குப்பம், சுப்பையா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (வயது 57). இவர் புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறையில் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவரது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் நடந்தது. இதில் பங்கேற்று விட்டு மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.4 லட்சம் ரொக்க பணமும், 4 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அரியாங்குப்பம் போலீசில் பிரேமா புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் சுப்பையா நகர் பகுதியைச் சேர்ந்த சிலர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் சந்தேகத்துக்குரிய நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த டூ வீலர் மெக்கானிக் ஆகாஷ்(22) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இதுபோல பல வீடுகளில் தனது கைவரிசையை காட்டியது தெரிய வந்தது.
அவர் இதுபோல கடந்த 11-ந் தேதி அப்பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி வெங்கடேஷ் வீட்டில் 8 பவுன் நகையும், அதே பகுதியைச் சேர்ந்த பொதுப்பணித் துறை ஊழியரான செல்வராஜ் என்பவரது வீட்டில் 10 பவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் ரொக்கமும் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் கொள்ளையடித்த நகையை அடகு வைத்து புதிதாக கார் வாங்கி ஆடம்பரமாக சுற்றி வந்தது தெரிய வந்தது. இவரிடமிருந்து ரூ.4 லட்சம் ரொக்கம், 12 பவுன் நகை மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அரியாங்குப்பம் போலீசார் அவரை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.