1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது; சாதி, வருமான சான்றிதழ்களை இணையதளம் மூலம் பெறலாம் - கலெக்டர் அறிவிப்பு
புதுவையில் குடியிருப்பு, குடியுரிமை, சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி மாவட்ட கலெக்டரும், வருவாய்துறை சிறப்பு செயலாளருமான அருண் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் முக்கிய சேவைகள் இணையம் வழியாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தாசில்தார் அலுவலகம், துணை தாசில்தார் அலுவலகங்களில் வழங்கப்படும் குடியிருப்பு, குடியுரிமை, சாதி மற்றும் வருமான சான்றிதழ்கள் இணையதளம் மூலம் வழங்கப்பட உள்ளது.
இந்த சேவையை https://ed-ist-r-ict.py.gov.in/ என்ற இணையதள முகவரியில் பொதுமக்கள் எளிதாக பெறலாம். இதனால் போலி சான்றிதழ்களை தடுக்க முடியும்.
இணையதளம் மூலமாக சான்றிதழ்கள் வழங்குவது குறித்து தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்றுடன் (ஞாயிற்றுக் கிழமை) இந்த பயிற்சி நிறைவுபெறுகிறது. இதில் கல்வி, தகவல் தொழில்நுட்பம், ஆதிதிராவிடர் நலன் ஆகிய துறைகளின் சார்பில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. எனவே இந்த சேவையை பயன்படுத்தி இணையதளம் மூலமாக விண்ணப்பித்து குடியிருப்பு, குடியுரிமை, சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.