குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து நாங்குநேரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, நாங்குநேரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2019-06-22 22:15 GMT
நாங்குநேரி, 

குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, நாங்குநேரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதைக் கண்டித்து, நாங்குநேரி தாலுகா அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசுகையில், தாமிரபரணி ஆற்றில் இருந்து பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீரை அரசு வழங்கி வருகிறது. ஆனால் இப்பகுதியில் வசிக்கும் 50 லட்சம் மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு அரசு தவறி விட்டது என்று கூறினார்.

காலிக்குடங்களுடன்

ஞானதிரவியம் எம்.பி. பேசுகையில், தமிழக மக்களுக்கு குடிநீரை வழங்காத அ.தி.மு.க. அரசை உடனே அகற்ற வேண்டும் என்று கூறினார்.

பூங்கோதைஎம்.எல்.ஏ.பேசுகையில், தி.மு.க. ஆட்சியின்போது, நெல்லை மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பில் 15-க்கு மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அந்த பணிகளுக்கு இதுவரையிலும் ரூ.1,000 கோடி மதிப்பிடப்பட்டும் இதுவரையிலும் பணிகளை நிறைவேற்றவில்லை என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் கிரகாம்பெல், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவகுமார் உள்பட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.பெண்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்