வெள்ளகோவில் அருகே கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை; 2 லாரிகள் பறிமுதல், ஆர்.டி.ஓ. அதிரடி
வெள்ளகோவில் அருகே கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில் 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெள்ளகோவில்,
வெள்ளகோவில் முத்தூர் சாலையிலுள்ள மாந்தபுரம் வழியாக கீழ்பவானி பாசனத் திட்ட வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் அருகிலுள்ள ஒரு விவசாய பூமியிலுள்ள கிணற்றில் தற்போது பாதியளவு தண்ணீர் உள்ளது. சுற்றுவட்டாரப்பகுதி கிணறுகள், ஆழ்குழாய்க்கிணறுகளில் மழையில்லாத காரணத்தால் தண்ணீர் மிகவும் குறைந்து விட்டது.
இந்நிலையில் அந்த மாந்தபுரம் விவசாய கிணற்றிலிருந்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு எடுக்கப்படும் தண்ணீர் வெள்ளகோவில் நகரம், அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகிறது.
அந்த மாந்தபுரம் கிணற்றில் அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் அப்பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் சட்டத்துக்குப்புறம்பாக விவசாய இலவச மின் இணைப்பு மூலம் விவசாய கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து விற்கப்படுகிறது. இதனைத்தடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று தாராபுரம் ஆர்.டி.ஓ.பவன்குமார் மாந்தபுரத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். அவரது உத்தரவின் பேரில் தண்ணீர் எடுத்த 2 லாரிகள் மற்றும் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது.