வெள்ளகோவில் அருகே லாரியை சிறைபிடித்த விவகாரம்: இருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு
வெள்ளகோவில் அருகே கழிவு எண்ணெயை கொண்டு சென்ற லாரியை சிறைபிடித்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் மோதி கொண்டனர். இந்த சம்பவத்தில் 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
வெள்ளகோவில்,
வெள்ளகோவில் அருகே உள்ள வேப்பம்பாளையம் சிட்கோ தொழிற்பேட்டையில் கழிவு எண்ணெயை மறுசுழற்சி செய்யும் ஆலை உள்ளது. இந்த ஆலையால் நிலத்தடி நீர் மற்றும் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதால் ஆலையை மூட இப்பகுதி பொதுமக்கள் வருவாய் துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர். இதனால் இந்த ஆலை இயங்காமல் இருந்தது.
இந்நிலையில் ஒரு லாரி கழிவு எண்ணெயையுடன் சிட்கோ தொழிற்பேட்டைக்கு சென்றது. இதை அறிந்த பொதுமக்களும் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் லாரியை சிறை பிடித்தனர். இதை அறிந்த ஆயில் மில் தொழிற்சாலையின் உரிமையாளர்கள் விஜயகுமார் , அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்களுக்கும், ஆயில் மில் உரிமையாளருக்கும் தகராறு ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியது.
பொதுமக்களுடன் இருந்த இடைக்காட்டுவலசு வக்கீல் தெண்டபாணி. சரவணன் ஆகியோரை ஆயில் மில் உரிமையாளர்கள் அடித்து உதைத்து காயப்படுத்தி விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆயில் மில் உரிமையாளர் வந்த காரை உடைத்து விட்டனர். இருதரப்பினரும் மோதி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி வக்கீல் தெண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் விசாரணை செய்து ஆயில் மில் உரிமையாளர்கள் விஜயகுமார் .அருண்குமார் ஆகிய 2 பேர் மீதும் கொலை மிரட்டல் வழக்கும், கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்துள்ளார்.
ஆயில் மில் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் இடைக்காட்டு வலசு வக்கீல் தெண்டபாணி, சரவணன், வேப்பம்பாளையம் ராமசாமி, ஈஸ்வரமூர்த்தி, முத்துகுமார் ஆகிய 5 பேர் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.