டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

Update: 2019-06-22 21:30 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி

திருச்செந்தூரில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி 1995-ம் ஆண்டு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனரால் துவங்கப்பட்டது. இளநிலை பட்டப்படிப்பில் ஆறு துறைகளையும், முதுநிலை பட்டப்படிப்பில் ஆறு துறைகளையும் கொண்டுள்ளது. இக்கல்லூரி NBA, TCS அங்கீகாரம் மற்றும் ISO 9001:2015 தரச்சான்றிதழையும் பெற்றுள்ளது.

தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறை(DSIR) இக்கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுத் துறைக்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

தனித்தனி ஆய்வகங்கள், நூலகம்

என்ஜினீரியங் படிப்பில் கட்டவியல் துறை (Civil), இயந்திரவியல் துறை (Mechanical), கணினித்துறை (CSE), மின் மற்றும் மின்னணுத் துறை (EEE), தகவல் தொழில் நுட்பத்துறை (IT), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (ECE) மற்றும் முதுநிலை பட்ட மேற்படிப்பில் கணினித்துறை (MECSE), தகவல் தொழில் நுட்ப துறை (M.Tech), ஆற்றல் சார் மின்னணுவியல் மற்றும் டிரைவ்ஸ் (MEStructural), வி.எல்.எஸ்.ஐ வடிவமைப்பு பொறியியல்(MEVLSI Design) மற்றும் வணிக நிர்வாகத்துறை(M.B.A) ஆகிய பிரிவுகள் உள்ளன.

ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி செய்முறை ஆய்வகங்கள், அனைத்து துறைக்கும் பொதுவான மைய நூலகம் மற்றும் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி நூலகமும் உள்ளன. இக்கல்லூரியின் அனைத்து இளநிலை துறைகளும் மற்றும் முதுநிலை கணினி துறையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நிரந்தரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சவால்களை சமாளிக்க பயிற்சி

மேலும் இக்கல்லூரியின் கணினி துறை மற்றும் மின்னணுவியல் தொடர்பியல் துறைக்கு ஆராய்ச்சி மையத்திற்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. மாணவர்களின் வளர்ச்சிக்காக நல்ல முறையில் பயிற்சி அளிக்க வேலைவாய்ப்புகளை பெற்றுத்தர பிரத்யேகமான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் விவரம், அங்கு வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள், வாழ்க்கையை எதிர்கொள்ள தேவையான தன்னம்பிக்கை, சவால்களை சமாளிக்கக்கூடிய திறன் போன்றவற்றை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறப்பு வகுப்புகள்

கடந்த வருடம் இந்த கல்லூரியை சேர்ந்த 161 மாணவர்கள் வளாக தேர்வு மூலம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.

மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வகையில் அந்தந்த துறைகளுக்கு ஏற்ப நவீன மென்பொருள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்கள் வளாகத்தேர்வில் வெற்றி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் வாரந்தோறும் திறனாய்வு தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ் வழிக்கல்வி பயின்ற மாணவர்களின் தடுமாற்றங்களை உணவுப்பூர்வமாக அறிந்து, தமிழ் வழியில் கல்வி கற்ற மாணவர்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், ஆங்கில வழிக்கல்வி பயின்ற பிற மாணவர்களோடு போட்டியிடும் வகையிலும் சிறப்பான வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை

மாணவர்களுக்கு எழுத்துத் திறன், சிந்தனை திறன், மாதிரி தேர்வுகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு ஆண்டுதோறும் வளாகத்தேர்வு மூலம் பணியமர்த்தப்படுகின்றனர்.

இதன் பயனாக கடந்த ஆண்டில் 25-க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் பல்வேறு துறைகளை சேர்ந்த இறுதியாண்டு மாணவ-மாணவிகள் டி.சி.எஸ், இன்போசியஸ், டொரண்டோ, இன்போவியூ, சோகோ, மிஸ்ட்ரால், சி.டி.எஸ், போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பினை பெற்று உள்ளனர்.

ஒரு மாணவருக்கு ஒரு வேலை என்ற கோட்பாட்டுடன் 100 சதவீத வேலைவாய்ப்பினை நோக்கி கல்லூரி பயணித்து கொண்டு இருக்கிறது.

ஆராய்ச்சியில் சாதிக்கும் மாணவர்கள்

கடந்த வருடம் பல்கலைக்கழக தேர்வில் தரவரிசை பட்டியலில் கல்லூரியை சேர்ந்த 10 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் கல்லூரியில் 13 ஆராய்ச்சி திட்டங்களுக்கு DST, DRDO., AICTE மற்றும் BIRAC ஆகிய நிறுவனங்கள் மூலம் ரூ.96 லட்சம் நிதி உதவியாக பெறப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் மாணவர்களின் ஆராய்ச்சி அறிவை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு துறை சார்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் ஆராய்ச்சி திட்டங்களை IEEE, TNSCST மற்றும் IE(I) நிதி நிறுவனங்களின் உதவியுடன் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

கடந்த கல்வியாண்டு, 2018-19-ல் இறுதியாண்டு பயின்று கொண்டிருக்கும் மாணவ-மாணவியரின் செயல்முறை திட்டம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் (TNSCST) மற்றும் இந்திய பொறியாளர்களின் நிறுவனத்திலும் (IEI) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி மற்றும் செயல்முறை திட்டத்திற்காக அந்த மாணவர்கள் பரிசுகளையும் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்