ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்; சங்க கூட்டத்தில் தீர்மானம்
ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஈரோடு,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட மாநாடு, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, ஓய்வு பெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் கே.மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாஸ்கர் பாபு, துணைத்தலைவர் திருவேரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்
ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தமிழகத்தில் பரப்பளவிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் பெரியதாக உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளை நிர்வாக நலனை முன்னிட்டும், பொதுமக்கள் நலனுக்காகவும் புதிதாக பிரித்து புதிய ஊழியர் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும்.
* கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி அளிக்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச கூலி தொகையினை நிர்ணயிக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு மண்டலத்திற்கு ஒரு பணி மேற்பார்வையாளர் என்ற விதத்தில் பணியிடம் ஏற்படுத்தி தர வேண்டும்.
* ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மேலும் பதிவரை எழுத்தருக்கு இணையான சலுகைகள் அனைத்தும் ஊராட்சி செயலாளர்களுக்கு கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.
* திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் வருகிற ஜூலை மாதம் 26, 27-ந்தேதிகளில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் துளசிமணி, மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.