ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்ப வேண்டும் மேதா பட்கர் பேட்டி
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்ப வேண்டும் என திருச்சியில் மேதா பட்கர் தெரிவித்தார்.
திருச்சி,
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் ஆலோசகருமான மேதா பட்கர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று திருச்சி வந்தார். திருச்சியில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி ஆயிரக்கணக்கான ஏழைகளின் குடியிருப்புகளை அகற்றுகின்றனர். நீர்நிலைகளில் வசதியானவர்கள் கட்டியுள்ள கட்டிடங்களை கண்டுகொள்வதில்லை. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்கள் மூலம் தமிழகத்தின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. பசுமையாக காட்சியளித்த காவிரி டெல்டா பகுதி வறண்டு போகும் நிலைக்கு வந்துவிட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வந்தாலும் அதனை அரசு கண்டுகொள்வதில்லை. மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் வகையில் திட்டங்களை அரசு கொண்டு வருகிறது.
இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். இயற்கை வளங்களை அழித்து விட்டால் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது மட்டுமல்லாமல் உணவு பஞ்சமும் வந்துவிடும். அதன்பிறகு மனிதர்கள் மட்டுமில்லை உயிரினங்களும் வாழ முடியாத நிலை ஏற்படும். மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். சுற்றுச்சூழல் ஆர்வலர், போராளி முகிலன் என்ன ஆனார் என்று தெரியவில்லை. மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீதிமன்றம் தான். மாயமான முகிலனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நாளை (அதாவது இன்று) மரக்காணம் முதல் ராமேசுவரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. மக்களின் போராட்ட உணர்வுக்கு தமிழக அரசு மதிப்பளிக்க வேண்டும். பசுமை போர்வை அழிவதை தடுக்க வேண்டும். நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்ப வேண்டும். நாட்டில் நதிகளை இணைப்பது என்பது கானல் நீர் போன்றது. அதற்கு சாத்தியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க தலைவர் லெனின் உள்பட விவசாய சங்கத்தினர், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.