செம்பூர் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி மானபங்கம் சீனியர் டிக்கெட் பரிசோதகர் கைது

செம்பூர் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்த சீனியர் டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-06-21 22:45 GMT
மும்பை, 

செம்பூர் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்த சீனியர் டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

மாணவி மானபங்கம்

மும்பை துறைமுக வழித்தடத்தில் உள்ள செம்பூர் ரெயில் நிலையத்தில் நேற்றுமுன்தினம் சீனியர் டிக்கெட் பரிசோதகர் சந்தோஷ் துமாலே(வயது45) என்பவர் பணியில் இருந்தார். அவர் மின்சார ரெயிலில் வந்து இறங்கிய 17 வயது கல்லூரி மாணவி ஒருவரிடம் டிக்கெட்டை காண்பிக்கும்படி கூறினார். அப்போது, திடீரென அவர், மாணவியை தொட்டு மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதை சற்றும் எதிர்பார்க்காத மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

டிக்கெட் பரிசோதகர் கைது

பின்னர் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார். மாணவியின் தந்தை மகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று டிக்கெட் பரிசோதகர் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டிக்கெட் பரிசோதகர் சந்தோஷ் துமாலேயை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்