நாகர்கோவிலில் பெண் தீக்குளித்து தற்கொலை
நாகர்கோவிலில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;
நாகா்ேகாவில்,
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பட்டாரியர்தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி சுப்பம்மாள் (வயது 60). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் தங்களது குடும்பத்துடன் வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் ராமசாமி கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து வீட்டில் சுப்பம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வெகு நேரம் ஆகியும் சுப்பம்மாள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த கழிவறையில் சுப்பம்மாள் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுப்பம்மாள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துள்ளார். எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.