தலைமை ஆசிரியர்கள் கூட்டம்: மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் முதன்மை கல்வி அலுவலர் கணே‌‌ஷ் பேச்சு

மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என பாளையங்கோட்டையில் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் கணே‌‌ஷ் கூறினார்.

Update: 2019-06-21 22:00 GMT
நெல்லை, 

மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என பாளையங்கோட்டையில் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் கணே‌‌ஷ் கூறினார்.

தலைமை ஆசிரியர்கள் கூட்டம்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணே‌‌ஷ் தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட அலுவலர்கள் சுடலை, சீனிவாசன், சவுந்திர சேகரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேர்முக உதவியாளர் நாராயணன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் கணே‌‌ஷ் பேசியதாவது:-

மாணவர் சேர்க்கை

பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை உடனடியாக தேர்வு எழுத வைக்க வேண்டும். அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பள்ளிக்கூடங்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

புதிய பாடத்திட்டத்தை அனைத்து மாணவர்களுக்கும் சிரமம் இல்லாமல் கற்று கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். மேலும் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களை தயார் செய்ய வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, வள்ளியூர், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய 5 கல்வி மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மாலையில் மெட்ரிக்குலேசன் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்