2019-20-ம் ஆண்டுக்கு மண்டியா மாவட்ட பஞ்சாயத்தில் ரூ.908 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்

மண்டியா மாவட்ட பஞ்சாயத்தில் 2019-20-ம் ஆண்டுக்கு ரூ.908 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2019-06-20 23:00 GMT
மண்டியா, 

மண்டியா மாவட்ட பஞ்சாயத்தில் 2019-20-ம் ஆண்டுக்கு ரூ.908 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் தாக்கல்

மண்டியா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் துணைத்தலைவி காயத்ரி, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி எலக்கிகவுடா மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மாவட்ட பஞ்சாயத்து தலைவி நாகரத்னா, இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2019-20-ம் ஆண்டுக்கு மொத்தம் ரூ.908.02 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.293.02 கோடியும், 7 தாலுகா பஞ்சாயத்துக்களுக்கு ரூ.613 கோடியும், கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.18.88 கோடியும் ஒதுக்கப்பட்டது.

சமூக நலத்துறைக்கு ரூ.18.88 கோடி

மாவட்ட பஞ்சாயத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், பொதுத்துறைக்கு 43.18 கோடியும், வயது வந்தோர் படிப்புக்கு ரூ.7.90 லட்சமும், ஒதுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலத்துறைக்கு ரூ.1.95 கோடியும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.47.84 கோடியும், சமூக நலத்துறைக்கு ரூ.18.88 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் படிக்கும் 93,980 மாணவ-மாணவிகளுக்கு சீருடை, 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 1,16,272 மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வாங்கவும் ரூ.63.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குடிநீர் வினியோகம், அரசு கட்டிடங்கள் புனரமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்