பிரதமரின் ரூ.6 ஆயிரம் நிதியுதவி பெற அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் ரூ.6 ஆயிரம் நிதியுதவி பெற அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்.

Update: 2019-06-20 22:15 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2 எக்டேர் வரை நிலம் வைத்திருந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 நிதி உதவியானது, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 என விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இத்திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது, சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர கிராம நிர்வாக அதிகாரியிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.

பட்டா மாறுதல்

மேலும், வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதுவரை நிலமானது இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து வருகிற 30-ந்தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து, அதன் அடிப்படையில் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதற்கென தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தியை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்