அன்னவாசல் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஊற்று தண்ணீருக்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம்
அன்னவாசல் பகுதியில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஊற்று தண்ணீருக்கே நீண்ட வரிசையில் காத்திருந்து எடுத்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அன்னவாசல்,
தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. போதிய அளவு மழை பெய்யாததாலும், கிடைத்த தண்ணீரை சேமிக்க தவறியதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதேபோல, வறட்சி பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மாவட்டத்தின் பல இடங்களில் ஏரிகளும், குளங்களும் வறண்டு கிடக்கின்றன. இதனால், விவசாய நிலங்கள் பாலைவனம் போல் காட்சி அளிக்கின்றன. கால்நடைகளும் தீவனம், குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வருகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து ஆழ்துளை கிணறுகளிலும் நீர்வற்றி விட்டது. இதனால், மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் ஊராட்சி பகுதியில் குடி நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் கடம்பராயன்பட்டியில் உள்ள கண்ணியாக்குளம் பகுதியில் உள்ள ஊற்றுகள் மூலம் கிடைக்கும் கொஞ்சம் தண்ணீரை சேகரிக்க சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பெண்கள் காலிக்குடங்களுடன் தினமும் வந்து செல்கின்றனர்.
அவர்கள் கொண்டு வரும் குடங்கள் வரிசையாக வைக்கப்பட்டு ஒவ்வொரு குடமாக தண்ணீர் நிரப்பப்பட்டு எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவர் கூறுகையில், கண்ணியாக் குளத்தில் பல ஊற்றுகள் உள்ளன. இதில் இருந்து வரும் தண்ணீர் சுவைமிக்கது ஆகும். தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையால் இரவு பகல் பாராது சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும் இங்கு வந்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர். இரவு நேரங்களில் தண்ணீர் எடுக்க வரும் பொதுமக்கள் நலன்கருதி மின்சார வசதி ஏற்படுத்திதர வேண்டும்.
மேலும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முன் வர வேண்டும். லாரிகள் மூலம் சுத்தமான குடிநீரை தினமும் வினியோகம் செய்ய வேண்டும் என்றார்.