குடிநீர் வழங்க வலியுறுத்தி நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
ஆதம்பாக்கத்தில் குடிநீர் வழங்க வலியுறுத்தி நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியில் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. தெருக்களில் தொட்டி வைத்து லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து அதில் நிரப்பி வினியோகம் செய்து வந்தனர். ஆனால் அனைவருக்கும் இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை.
எனவே லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்வதை நிறுத்திவிட்டு, வீட்டு குடிநீர் குழாய்களில் தண்ணீர் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலையில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.
தி.மு.க. வட்டச்செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், காங்கிரஸ் மண்டலத்தலைவர் சீத்தாபதி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அமைப்பாளர் சீராளன் உள்பட ஏராளமானோர் ஆதம்பாக்கம் நீரேற்றும் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் அங்கிருந்து தண்ணீர் லாரிகள் செல்லவிடாமல் தடுத்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது குடிநீர் கேட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
தகவல் அறிந்ததும் குடிநீர் வாரிய பகுதி துணை பொறியாளர் வெங்கடேசன், வார்டு உதவி பொறியாளர்கள் தனசேகரன், அனிதா, ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் சமரசம் பேசினார்கள்.
மேலும் குழாய்களில் தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.