விளாத்திகுளம் ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

விளாத்திகுளம் ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.;

Update:2019-06-21 04:00 IST
விளாத்திகுளம், 

விளாத்திகுளம் ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் விளாத்திகுளம் தாலுகா குழு சார்பில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நேற்று காலை நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் புவிராஜ் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முகராஜ், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வீரபாண்டியபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட முறைகேடு குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரியப்படுத்தியவர்களை மிரட்டும் பணி பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதனை அறிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காசிராஜன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகள் குறித்த உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்