குளியலறையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் சாவு - துண்டு கழுத்தை இறுக்கியதால் பரிதாபம்
கடையநல்லூரில் குளியலறையில் துண்டை ஊஞ்சல் கட்டி விளையாடியபோது, கழுத்தை இறுக்கியதால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
அச்சன்புதூர்,
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் இந்திரா நகர் காலனி தெருவைச் சேர்ந்தவர் முருகன். கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள். மூத்த மகன் கரடிராம் (வயது 13), அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பும், இளைய மகன் கதிர்செல்வம் (10) 5-ம் வகுப்பும் படித்தனர்.
நேற்று காலையில் கரடிராம் தனது வீட்டின் குளியல் அறையின் கதவை சாத்தி வைத்து விட்டு குளிக்க சென்றான். அப்போது அவன், தலை துவட்ட பயன்படுத்தும் துண்டின் இரு முனைகளையும், அங்குள்ள கம்பியில் ஊஞ்சல் போன்று தொங்கவிட்டு விளையாடினான்.
அப்போது கரடிராம் துண்டின் நடுவில் தலையை விட்டு ஊஞ்சல் போன்று ஆடியதாக தெரிகிறது. இதில் துண்டு கழுத்தை இறுக்கியதால் மூச்சுத்திணறிய கரடிராம் மயங்கினான்.
நீண்ட நேரமாகியும் கரடிராம் குளியல் அறையில் இருந்து வெளியே வராததால், அவனுடைய தாயார் அங்கு சென்று பார்த்தார். அப்போது கரடிராம் துண்டில் கழுத்து இறுகிய நிலையில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.
உடனே கரடிராமை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கரடிராமை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த கரடிராமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளியலறையில் துண்டை ஊஞ்சல் கட்டி விளையாடியபோது, கழுத்து இறுக்கியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.