கூடலூரில் தொடரும் மின்வெட்டு; பொதுமக்கள் கடும் அவதி
கூடலூர் பகுதியில் தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூர், பந்தலூர் தாலுகாவில் சுமார் 2½ லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு வனச்சட்டங்கள் அமலில் உள்ளதால் சாலை, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. நீலகிரியில் மின் உற்பத்தி நிலையங்கள் அதிகம் உள்ள நிலையில், கூடலூரில் தொடரும் மின்வெட்டால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் கூடலூர் பகுதியில் பலத்த மழையுடன் சூறாவளி காற்று வீசியது.
அப்போது பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதை த்தொடர்ந்து தடையற்ற மின்சார வினியோகம் செய்ய கடந்த 17-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாலை 6½ மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் இனி வரும் நாட்களில் தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் கூடலூர் பகுதியில் மின்வெட்டு தொடர்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கூடலூரில் குறைந்த மின் அழுத்த பிரச்சினை இருந்தது. இதன் காரணமாக மின்சாரம் அடிக்கடி துண்டிக் கப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். பல மணி நேரத்துக்கு பிறகு நேற்று மதியம் 1½ மணிக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. ஆனால் கிராமப்புறங்களுக்கு சரிவர மின்சாரம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மின்வாரிய ஊழியர் களிடம் கேட்டபோது, உயர்மின் அழுத்த வழித்தடத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் மின்வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.