லாலாபேட்டை அருகே பனைமரங்கள் தீயில் எரிந்து நாசம் தீயணைப்பு படைவீரர்கள் போராடி அணைத்தனர்

லாலாபேட்டை அருகே பனைமரங்கள் தீயில் எரிந்து நாசமானது. இதையடுத்து தீயணைப்பு படைவீரர்கள் போராடி அணைத்தனர்.

Update: 2019-06-19 22:45 GMT
லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், லாலாபேட்டை காவிரி கரையோரத்தில் வனத்துறைக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை திடீரென 20 பனைமரங்கள் தீயில் எரிந்து கொண்டு இருந்தது. இதைக்கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் நிலைய அதிகாரி மனோகரன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் பனைமரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் பனைமரங்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த நிழற்குடையும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து எப்படி நடந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர். பனைமரங்கள் தீயில் எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்