ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. இடைநீக்கம் குறித்து எனக்கு தெரியாது சித்தராமையா பேட்டி

ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. மீது எடுக்கப்பட்டுள்ள இடைநீக்க நடவடிக்கை குறித்து எனக்கு தெரியாது என்று சித்தராமையா கூறினார்.

Update: 2019-06-19 22:30 GMT
பெங்களூரு, 

ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. மீது எடுக்கப்பட்டுள்ள இடைநீக்க நடவடிக்கை குறித்து எனக்கு தெரியாது என்று சித்தராமையா கூறினார்.

ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. மீது இடைநீக்க நடவடிக்கை குறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எனக்கு தெரியாது

ரோஷன் பெய்க் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ., கட்சி கட்டுப்பாட்டை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்.

கட்சியில் ஒழுங்கீனத்தை சகித்துக்கொள்ள முடியாது. விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. அதனால் கர்நாடக காங்கிரஸ் அனுப்பிய அறிக்கை அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் தலைைம நடவடிக்கை எடுத்திருக்கும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

ஒழுக்கம் முக்கியமானது

துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறும்போது, “ரோஷன் பெய்க் இடைநீக்கம் குறித்த செய்தியை பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். எந்த காரணத்திற்காக அவரை இடைநீக்கம் செய்துள்ளனர் என்பது எனக்கு தெரியாது. இதுபற்றி கட்சியின் மாநில தலைவருடன் பேசிய பிறகு கருத்து தெரிவிக்கிறேன்” என்றார்.

நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவிக்கையில், “கட்சியில் ஒழுக்கம் மிக முக்கியமானது. இங்கு தனிப்பட்ட ஒருவரை புகழ்ந்து பேசக்கூடாது. கட்சியின் பெருமையை பேச வேண்டும். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோருக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்