வானவில் : பென்ஸ் கார்களுக்கு ரூ.12.80 லட்சம் வரை தள்ளுபடி

சொகுசு காரான மெர்சிடஸ் பென்ஸ் மாடலில் எஸ்-கிளாஸ், இ-கிளாஸ், ஜி.எல்.ஏ., ஜி.எல்.இ. உள்ளிட்ட மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ.12.80 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. பிரீமியம் காரான ஏ.எம்.ஜி. மேபாஷ் உள்ளிட்டவற்றுக்கும் இந்நிறுவனம் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

Update: 2019-06-19 13:16 GMT
2018 மாடல் டீசல் எஸ்-கிளாஸ் காருக்கு ரூ.12.80 லட்சம் தள்ளுபடி மற்றும் இலவச காப்பீடு ஆகியன அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. பெட்ரோல் மாடலுக்கு ரூ.9.05 லட்சமும் காப்பீடும் இலவசமாக அளிக்கப்படும். மேபாஷ் மாடலுக்கு ரூ.7.75 லட்சம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 சி.எல்.ஏ. மாடலுக்கு ரூ.4.25 லட்சமும், 2019 மாடலுக்கு ரூ.3.25 லட்சமும் தள்ளுபடி தரப்படும் என அறிவித்துள்ளது. 2015 மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.10.25 லட்சம் தள்ளுபடி அறிவித்து உள்ளது இந்நிறுவனம்.

2018 ஜி.எல்.இ. மாடல் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், ஜி.எல்.இ. 43 கூபே மாடலுக்கு ரூ.3 லட்சமும் சலுகை அறிவித்துள்ளது.

2018 இ-கிளாஸ் மாடலுக்கு ரூ.6.75 லட்சமும், 2019 மாடலுக்கு ரூ.4.80 லட்சமும், 2018 மாடலுக்கு ஆல் டெரைன் ரூ.6 லட்சமும், 2019 மாடலுக்கு ரூ.3.50 லட்சமும் சலுகை அறிவித்துள்ளது.

2018 ஜி.எல்.சி. எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ.6.25 லட்சமும், 2019 மாடலுக்கு ரூ.3.50 லட்சமும் தள்ளுபடி தரப்படும் என தெரிவித்துள்ளது.

2018 சி-கிளாஸ் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.6.25 லட்சமும், 2019 மாடலுக்கு ரூ.3.75 லட்சமும் தள்ளுபடி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2016, ஏ மற்றும் பி கிளாஸ் மாடலுக்கு ரூ.6.25 லட்சம் தரப்படுகிறது. 2018 ஜி.எல்.ஏ. மாடலுக்கு ரூ.6.10 லட்சமும், 2019 மாடலுக்கு ரூ.4.35 லட்சமும் சலுகை தரப்படும் என தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மெர்சிடஸ் விற்பனையகங்களில் இந்த சலுகை தரப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்