வானவில் : டிஜிட்டல் ரைட்டிங் பேட்
இது ஸ்மார்ட் யுகம். மேலும் காகிதங்கள் உபயோகத்தை குறைக்க வலியுறுத்தும் காலம். இந்த இரண்டு இலக்குகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வந்துள்ளது டிஜிட்டல் ரைட்டிங் பேட்.
போர்டிரானிக்ஸ் நிறுவனம் பி.ஓ.ஆர். 796 என்ற பெயரில் இந்த டிஜிட்டல் பேடை வடிவமைத்துள்ளது. இதில் எழுதுவதற்கு டிஜிட்டல் பேனா (ஸ்டைலஸ்)வும் வழங்கப்படுகிறது. பார்ப்பதற்கு ஸ்மார்ட்போன் போலவே காட்சி தருகிறது.
இது 10 அங்குல திரையைக் கொண்டது. எழுதுவது, அதை நீக்குவது, கடிதங்கள் எழுதுவது, நினைவூட்டல் ஆகிய நடவடிக்கைகளை இதன் உதவியோடு மேற்கொள்ள முடியும். மிக வலுவான பிளாஸ்டிக் கால் ஆனது. இதனால் குறிப்புகள் எடுக்கும்போது உங்கள் மணிக்கட்டு அழுத்தினாலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகாது. எழுதியது முழுவதும் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் முற்றிலுமாக அழித்துவிட முடிவது கூடுதல் சிறப்பம்சமாகும்.
பொழுது போகாத சமயங்களில் இதில் வீடியோ கேம்களான கிராஸஸ், நகெட்ஸ் உள்ளிட்டவை விளையாடலாம். ஸ்டைலஸ் இல்லாத சமயங்களில் பென்சில் அல்லது விரல் முனைகளில் கூட எழுத முடியும். இதன் விலை ரூ.799 ஆகும்.