வானவில் : மாற்றுத் திறனாளிகளுக்கான 2சி3டி கேமரா

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் பல கண்டுபிடிப்புகள் நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன.

Update: 2019-06-19 10:37 GMT
பார்வையற்றோர்களால் புகைப்படங்களை பார்த்து ரசிக்க முடியாது. ஆனால் அவைகளை உணர வைக்கும் ஒரு கேமராவை வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த 2 C 3 D கேமரா திரீ டி பிக்சல்ஸ் என்று சொல்லக்கூடிய முப்பரிமாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கிறது. புகைப்படம் எடுத்த பின்னர் இந்த பிக்சல்கள் நகர்ந்து போட்டோவில் உள்ள உருவத்தை வடிவமாக மாற்றுகிறது.

இதனால் பார்வையற்றோர், போட்டோவில் இருப்பதை தொட்டு உணர்ந்து கொள்ள முடியும். முக அமைப்புகள், மலைகள், இயற்கை காட்சிகள் ஆகியவற்றை வடிவங்களாக அவர்கள் அறிந்து கொள்ள உதவுகிறது இந்த கேமரா. பார்வையற்றோருக்கான பிரெய்லி மூலம் எழுத்துக்களைக் தொட்டு அறிந்து கொள்வதை போல இந்த கேமரா மூலம் உருவங்களை புரிந்து கொள்ள முடியும்.

மேலும் செய்திகள்