புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு ராதாகிருஷ்ண விகே பாட்டீல்- வீட்டு வசதி, ஆஷிஸ் செலார்- பள்ளிக்கல்வி
மராட்டியத்தில் புதிதாக பதவியேற்ற மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் புதிதாக பதவியேற்ற மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி துறை மந்திரி
மராட்டிய மந்திரி சபை கடந்த ஞாயிற்றுக்கிழமை விஸ்தரிக்கப்பட்டது. இதில் காங்கிரசில் இருந்து விலகிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார் உள்பட 13 பேர் மந்திரி பதவி ஏற்றனர். இவர்களில் 8 பேர் கேபினட் மந்திரிகள். 5 பேர் இணை மந்திரிகள். இவர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டு உள்ளன.
அதன்படி புதிய கேபினட் மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் விவரம் வருமாறு:-
1. ராதாகிருஷ்ண விகே பாட்டீல்- வீட்டு வசதித்துறை.
2. ஜெய்தத் சிர்சாகர்- வேலைவாய்ப்பு மற்றும் தோட்டக்கலை.
3. ஆஷிஸ் செலார்- பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலம்.
4. சஞ்சய் குதே - தொழிலாளர் நலம், பிற்படுத்தப்பட்டோர் நலம்.
5. சுரேஷ் காடே - சமூகநீதி
6. அனில் போன்டே - வேளாண்.
7. அசோக் உய்கே - பழங்குடியினர் நலம்.
8. தானாஜி சாவந்த் - நீர்வளம்.
புதிய இணை மந்திரிகள்
புதிய இணை மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் விவரம்:-
9. யோகேஷ் சாகர் - நகர்புற வளர்ச்சி துறை.
10. அவினாஷ் மகாதேகர் - சமூகநீதி துறை.
11. சஞ்சய் பெகடே - தொழிலாளர்நலம், சுற்றுச்சூழல் துறை.
12. பரினாய் புகே - பொதுப்பணித்துறை, வனம் மற்றும் பழங்குடியினர் மேம்பாடு.
13. அதுல்சாவே - தொழில் மற்றும் சுரங்க துறை.
மேலும் 4 கேபினட் மந்திரிகளுக்கு இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டன. அவர்கள் விவரம் வருமாறு:-
14. சம்பாஜி பாட்டீல் - உணவு பொருள் வழங்கல் மற்றும் திறன்மேம்பாடு, முன்னாள் ராணுவ வீரர்கள் நலம்.
15. ராம்ஷிண்டே - விற்பனை மற்றும் ஜவுளி.
16. ஜெய்குமார் ராவல் - உணவு மற்றும் மருந்து நிர்வாகம்.
17. சுபாஷ் தேஷ்முக் - நிவாரணம் மற்றும் மறுவாழ்வு.