கோவை தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடி மோசடி செய்த 3 பேர் கைது - ஒருவருக்கு வலைவீச்சு

கோவை தனியார்நிறுவனத்தில் ரூ.5 கோடி மோசடி செய்த 3பேரை போலீசார்கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளஒருவரை போலீசார்வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2019-06-18 22:30 GMT
கோவை,

கோவை கணபதி சத்திரோடு பகுதியை சேர்ந்தவர்சிவக்குமார்(வயது 47). இவர் கணபதியில்கட்டிடங்களுக்கு தேவையானடைல்ஸ்உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தில்செயல்இயக்குனராகசிதம்பரம் (46), கொள்முதல் பிரிவில் முரளி (36),கணக்கு பிரிவில்செல்வக்குமார்(32), ஷோரூம் மேலாளராக நாகராஜ்ஆகியோர் பணிபுரிந்துவந்தனர்.

இவர்கள் 4 பேரும் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நிறுவனத்தின் பில்களில் திருத்தம் செய்துரூ.5கோடிமோசடி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்தசிவக்குமார்கோவைகுற்றப்பிரிவு போலீசில்மேற்கண்ட 4 நபர்கள்குறித்து புகார்அளித்தார். மேலும் அவர்கள் மோசடி செய்தரூ.5கோடியை பெற்றுத்தரும்படிமனுவில் கூறியிருந்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோவைமாநகர போலீஸ்கமிஷனர் சுமித்சரண் உத்தரவுப்படி துணை கமிஷனர்பெருமாள் மேற்பார்வையில்உதவி கமிஷனர்சந்திரசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் நேற்று சிதம்பரம், முரளி,செல்வக்குமார்ஆகிய 3பேரை கைதுசெய்தனர்.

பின்னர்இவர்களை போலீசார்கோர்ட்டில்ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் நாகராஜைவலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்