ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த 6 மாதங்களாக பணிகள் வழங்கவில்லை; கலெக்டாிடம் கிராம மக்கள் புகார்

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் கடந்த 6 மாதங்களாக பணிகள் வழங்கவில்லை என்று கிராம மக்கள் மாவட்ட கலெக்டாிடம் புகார் மனு கொடுத்தனர்.

Update: 2019-06-18 22:45 GMT
சிவகங்கை,

காளையார்கோவில் தாலுகா செங்குளிபட்டி, சிறுசெங்குளிபட்டி மற்றும் துவரிபட்டி கிராம நலச்சங்கம் சார்பில் கலெக்டர் ஜெயகாந்தனிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-

முத்தூர் வாணியங்குடி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சிறுசெங்குளிப்பட்டி, துவரிப்பட்டி ஆகிய இரு கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்கு வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள் போதுமான அளவு இல்லை. கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. சாலை வசதி இல்லாமல் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

இதுதவிர, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் கடந்த 6 மாதங்களாக பணிகள் வழங்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்