ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்யும் முடிவை கண்டித்து பல்லாரிக்கு பாதயாத்திரை செல்லும் திட்டம் இல்லை எடியூரப்பா பேட்டி

ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்யும் முடிவை கண்டித்து பல்லாரிக்கு பாதயாத்திரை செல்லும் திட்டம் இல்லை என்று எடியூரப்பா கூறினார்.

Update: 2019-06-18 22:30 GMT
பெங்களூரு, 

ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்யும் முடிவை கண்டித்து பல்லாரிக்கு பாதயாத்திரை செல்லும் திட்டம் இல்லை என்று எடியூரப்பா கூறினார்.

பாதயாத்திரை

ஜிந்தால் நிறுவனத்திற்கு பல்லாரியில் 3,667 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிராக பா.ஜனதா தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நிலம் விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய கர்நாடக அரசு, மந்திரிசபை துணை குழுவை அமைத்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடக அரசின் முடிவை கண்டித்து, பா.ஜனதா சார்பில் பல்லாரி வரை பாதயாத்திரை மேற்கொள்ள பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதை எடியூரப்பா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரச்சினையை கிளப்புவோம்

ஜிந்தால் நிறுவனத்திற்கு மலிவு விலையில் மாநில அரசு நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து பல்லாரிக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் திட்டம் இல்லை. ஆனால் இந்த விஷயம் தொடர்பாக மாநிலம் முழுவதும் தீவிர போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

விவசாய கடன் தள்ளுபடி, ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்யும் முடிவு, நகைக்கடை மோசடி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சட்டசபை கூட்டத்தொடரில் பிரச்சினையை கிளப்புவோம். ஜிந்தால் நிறுவனத்திடம் இருந்து நான் ரூ.20 கோடி பெற்றதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களை திசை திருப்ப...

குமாரசாமி தனது குறையை மூடிமறைக்கவே, என் மீது குற்றம்சாட்டுகிறார். இதன் மூலம் மக்களை திசை திருப்ப அவர் முயற்சி செய்கிறார். குமாரசாமி ெபாறுப்பற்ற முறையிலோ அல்லது பொய்யாகவோ பேசுகிறார்.

என் மீது அரசியல் உள்நோக்கத்தில் போடப்பட்ட வழக்கு, சி.பி.ஐ. கோர்ட்டில் 3 ஆண்டுகளுக்கு முன்பே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. விவசாயிகளின் நிலத்தை பகல் கொள்ளையடிப்பதற்கு பதில் சொல்லாமல் குமாரசாமி, பீதியில் என் மீது குறை கூறுகிறார். என் மீதான குற்றச்சாட்டு பற்றி சட்டசபையில் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். ஆவணங்களை நான் கொண்டு வருகிறேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்