திருத்துறைப்பூண்டி அருகே வங்கநகர் வாய்க்காலை தூர்வார வேண்டும்; கலெக்டரிடம் கோரிக்கை மனு

திருத்துறைப்பூண்டி அருகே வங்கநகர் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று ஆடலரசன் எம்.எல்.ஏ. தலைமையில், கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Update: 2019-06-18 22:30 GMT
திருவாரூர்,

திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ. தலைமையில் வங்கநகர் பகுதி மக்கள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருத்துறைப்பூண்டி தாலுகா குலமாணிக்கத்தில் இருந்து வங்கநகர் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்காலை தூர்வார வேண்டும். இப்பகுதியில் உள்ள கிளை வாய்க்கால்களை தூர்வாரி கரைகளை கட்டி தரவேண்டும்.

மேலும் வள்ளியூர் என்ற இடத்தில் பாசன வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும். வங்கநகர் வாய்காலை தூர்வார வேண்டும். கோட்டகம் என்ற இடத்தில் பாசன வாய்க்காலில் கீக்குமுலி அமைந்துள்ளது அதை திருகு பலகையாக அமைத்து தர வேண்டும். இந்த கிராமத்தில் உள்ள 12 குளங்களை தூர்வார வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்