ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு எதிர்ப்பு: எடைக்கல்லை வீசி தாக்கியதில் போலீஸ்காரர் மண்டை உடைந்தது, 7 பேர் கைது
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து எடைக்கல்லை வீசி தாக்கியதில் போலீஸ்காரரின் மண்டை உடைந்தது. இதில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் கடந்த சில நாட்களாக நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி மயிலாடுதுறை வண்டிக்கார தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அனைத்து தரக்கடைகளும் அகற்றப்பட்டன. இதை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஒன்று திரண்டு, தரைக்கடை வைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது தாசில்தார் மலர்விழி, தரைக்கடை வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
நேற்று புதிய பஸ் நிலையம் வண்டிக்காரத்தெருவில் மீண்டும் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, நகர்நல அலுவலர் டாக்டர் கிருஷ்ணகுமார், நகர அமைப்பு ஆய்வாளர் கணேசரங்கன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை பொக்லின் எந்திரத்தின் மூலம் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது தரைக்கடை வியாபாரிகளும், அவர்களது சங்கத்தை சேர்ந்தவர்களும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றியதில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் மணிகண்டன் (வயது 24) மீது அங்கிருந்தவர்கள் எடைக்கல்லை வீசி தாக்கினர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை உத்தரவின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார், அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கழுக்காணிமுட்டத்தை சேர்ந்த துரைகணபதி (40), மாவட்டக்குழு உறுப்பினர் மயிலாடுதுறை சுந்தரமூர்த்தி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ரவீந்திரன் (63), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கழுக்காணிமுட்டத்தை சேர்ந்த ஸ்டாலின் (47), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி மாப்படுகை அவையாம்பாள்புரத்தை சேர்ந்த கணேசன் (74), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சோழம்பேட்டையை சேர்ந்த மேகநாதன் (41), திருக்கடையூர் பிச்சைக்கட்டளையை சேர்ந்த சிவராமன் (48), அருள்மொழிதேவன் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரஞ்சித் (23) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.