ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மாற்றி அமைக்காமல் வீடுகளை இடித்தால் தஞ்சை போர்க்களமாக மாறும் - அ.ம.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ரெங்கசாமி பேச்சு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மாற்றி அமைக்காமல் வீடுகளை இடித்தால் தஞ்சை போர்க்களமாக மாறும் என அ.ம.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ரெங்கசாமி பேசினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகரில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
இதனால் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே அ.ம.மு.க. சார்பில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அ.ம.மு.க. பொருளாளர் எம்.ரெங்கசாமி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், நிர்வாகி முருகேசன், வக்கீல் பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன், இணைச் செயலாளர் வக்கீல் தங்கப்பன், மாவட்ட செயலாளர் வக்கீல் நல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை மாநகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக சீனிவாசபுரம், சேவப்பநாயக்கன்வாரி, மேலஅலங்கம், செக்கடி, வடக்குஅலங்கம், கீழஅலங்கம் பகுதிகளில் குடியிருந்து வரும் ஏழை, எளிய கூலித்தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களை அவரவர் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
காமராஜ் மார்க்கெட், பழைய மீன் மார்க்கெட், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தற்போது உள்ள கடைகளை இடித்துவிட்டு புதுப்பிக்கும் பணி நடக்கிறது. ஏற்கனவே கடைகள் நடத்தி வரும் வணிகர்ளுக்கே அந்தந்த கடைகளை எவ்வித கட்டண உயர்வும் இன்றி வழங்க உறுதியளிக்க வேண்டும்.
ஜெபமாலைபுரம் பகுதியில் தற்போதுள்ள திறந்தவெளி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அதற்கு மாறாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்ற பெயரில், பொதுப்பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் 14 குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலிறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் ரெங்கசாமி பேசும்போது, ஜெயலலிதா என்ன சொன்னாரோ, எதை செய்யவில்லையோ அதற்கு எதிர் மறையாக தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் செயல்பட்டு வருகின்றனர். மக்களை பற்றி கவலைப்படாமல் தங்களது சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். வீடுகளை இடித்துவிட்டு அகழிகளை தூர்வாரி படகு சவாரி விட முடிவு செய்துள்ளனர். மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு படகுசவாரி தேவையா?.
இதற்கு தான் இந்த ஆட்சியை சசிகலா நீடிக்க வைத்தாரா? வீடுகள் இடிக்கப்படாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மாற்றி நிறைவேற்ற வேண்டும். ஏழை, எளிய மக்களை பற்றி கவலைப்படாமல் வீடுகளை இடிக்க முயற்சி செய்தால் தஞ்சை மாநகர் போர்க்களமாக மாறும். இதனால் வீடுகளை இடிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். புதிய கடைகள் கட்டப்பட்டாலும் தற்போது வணிகம் செய்பவர்களுக்கே அந்த கடைகளை வழங்க வேண்டும் என்றார்.
இதில் மாவட்ட பொருளாளர் விருத்தாசலம், பொதுக்குழு உறுப்பினர் இந்திராவேலாயுதம், தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, ஒன்றிய செயலாளர்கள் செந்தில்வேலன், கோவி.மனோகரன், பகுதி செயலாளர்கள் மகேந்திரன், செந்தில்குமார், அழகுராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.