கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உள்ளாட்சித்துறை ஊழியர்கள்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை உள்ளாட்சி துறை ஊழியர்கள் முற்றுகையிட்டனர். 7-வது ஊதியக்குழு குளறுபடிகளை தீர்க்க வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஏராளமானோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலக வாசலில் குவிந்தனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டனர். இதன்படி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற அவர்கள் கூட்ட அரங்கு அருகே வரை சென்று அங்கு முற்றுகையிட்டு உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. ஒரு சிலர் மட்டும் உள்ளே சென்று மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 265 ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் தொட்டி நீர்திறப்பாளர் மற்றும் துப்புரவு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் உத்தரவுபடி ஊதியம் வழங்குவதில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை பெரும்பாலான ஊராட்சிகளில் வழங்கப்படவில்லை. மேலும், தூய்மை காவலர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை. உடுமலை நகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் சாமளாபுரம் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் சாமளாபுரம் பேரூராட்சியில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். எங்கள் பேரூராட்சியின் செயல் அதிகாரி மற்றும் அலுவலர்கள் பல்வேறு காரணங்களை பொதுமக்களிடம் கூறி சுமார் 1500-க்கும் மேற்பட்ட புதிய குடிநீர் இணைப்பு கொடுக்கும் திட்டத்தை தயார் செய்துள்ளனர். பல காரணங்களை கூறி இணைப்புக்காக ஆயிரக்கணக்கில் ரூபாய் கட்டணமாக வசூலித்தும் வருகின்றனர்.
இதுமட்டுமின்றி பல ஒப்பந்த பணிகளை போலியான ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தம் எடுத்து பணி செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். ஏற்கனவே அதிகரித்து வரும் வரிவிதிப்புக்கு இடையே, இம்மாதிரியான நடவடிக்கை பொதுமக்களுக்கு சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் தவறு செய்யும் அதிகாரிகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.